யாத்ரீகன்

சேரும் இடத்தை விட, சுவாரசியமான பயணம்தான் இந்த வாழ்க்கை, இதில் எங்கோ சுற்றி திரியும் யாத்ரீகன் நான்.

என்று அடைவோம் இந்த வளர்சிதை மாற்றம் ?

Published by யாத்ரீகன் under on புதன், ஜூன் 21, 2006
"ஸ்கூல் விட்டு வந்ததும் வராததுமா படிக்கலையாப்பா...", அம்மாவோட குரல் ஒண்ணுங் ரொம்ப கண்டிப்பானதெல்லாம் இல்ல, அதுந்து கூட பேச தெரியாது அம்மாவுக்கு. ஆனா அதுக்கப்புறம் இன்னும் கொஞ்ச நேரத்துல வரப்போற அப்பா, என்ன எங்கேனு கேட்டுருவாரேனு பயத்துல எழுத்து மேஜையை இழுத்து கணக்கு போட ஆரம்பிக்குறேன்.

சே !!! அந்த பாண்டி பய கபடி வெளயாடுற யெடத்துக்குள்ள விடவே மாட்டான்.. ஆறாப்பு வந்தா பெரிய பையன்டா, அப்போ கூட சேந்து வெளயாடலாம்னு நேத்து தான் அசோக்கு சொன்னான், இன்னைக்கும் பாத்து கபடி டீம்க்கு ஆள் சேக்குறாங்கே..

அசோக்கு என்னோட பெஸ்ட் ப்ரெண்ட், நானும் அவனும் என்னைக்கும் பிரிய கூடாது, கல்யாணம் பண்ணாலும் அக்கா, தங்கச்சியத்தான் கட்டிக்கனும் அப்பொதான் ஒரே வீட்டுல இருக்க முடியும்...என்னனே புரியல ஆறாப்பு வந்ததும் அப்பா என்னை, இனிமே பக்கத்து சந்துல இருக்குற பசங்களோட போய் வெளையாட வேணாம்னு ஒழுங்கா படிக்குற வேலயப்பாருனு திட்டுறாரு...

ஸ்கூலு படிக்குற வரைக்கும், வீடு - வீட்ட விட்டா ஸ்கூலுனு போய் போய் வர்ரது தான் எனக்கு வேல, பக்கத்து சந்து பசங்களோட வெளயாடவோ, ஸ்கூலுல எக்ஸ்கர்சன் போகவோ விடவே மாட்டேனுட்டாங்க.. யப்பா இப்போ காலேஜு வந்தாச்சு..

அப்பா நம்மள கொஞ்சம் கண்டிச்சாலும் நம்ம நல்லதுக்காத்தான இருந்திருக்கு. இல்லாட்டி வெளயாட்டுத்தனாமாவே இருந்திருப்பேன் நல்ல ஸ்கூல்ல எடம் கெடச்சிருக்காது, அப்பாவுக்கு மெரிட்ல சீட் கெடச்சிருக்காது,செலவு கொரஞ்சிருக்காது... நாம வளர்ர சூழல் நம்ம வளர்ச்சில எவ்ளோ பங்கு கொள்ளுது !!! ஒருவேலை வெளயாண்டுக்கிட்டே இருந்திருந்தா இதெல்லாம் நமக்கு தெரியாமலே/கெடைக்காமலே போயிருந்துருக்கும்...


"அம்மா, இன்னைக்கு காலேஜ் முடிஞ்சதும், சத்யா ட்ரீட் இருக்குமா போய்ட்டு வர்றேன்..." "இன்னைக்கு பிரண்ட்ஸ் டேமா, எங்க கேங் எல்லோரும் இன்னைக்கு முழுக்க சேந்து சுத்தப்போறோம், போய்டு நைட்டுதான் வருவேன்...." "நாராயணன் அண்ணன் கல்யாணம்மா, பசங்க எல்லோரும் போறாங்க, அப்டியே சேந்து பக்கத்துல ஜாலியா ஊர் சுத்தீட்டு வர்றோம்மா..."

யப்பா, பிரண்ஸோட இருக்குறது எவ்ளோ சந்தோசமா இருக்கு, அப்பா-அம்மா சண்டையில்லாம, தாத்தாவோட தொந்தரவில்லாம..... இப்படியே எப்பவும்போல இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும்....

நேத்துதான் பைவ்ஸ்டார் படம் பாத்தோம், ஹய்யோ.. அதுல இருக்குற மாதிரி பிரண்ஸ் எல்லாம் சேந்து ஒரே வீட்ல இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...

இப்டி நெனைச்சுகிட்டு இருக்கைலயே நாலு வருசம் ஓடிப்போயிருச்சு.. அட வேலைக்கு முன்னால டிரைனிங்காமே, ஹை ப்ரெண்ட்ஸ் எல்லாமே சேந்து.. சரிஜாலியா இருக்கும்.

என்னடா இது ட்ரெயினிங் முடிச்சிட்டு ஒரே எடத்துல போடுவான்னு பாத்தா, என்னய மட்டும் தனியா கல்கத்தா போட்டுருக்கான், அட புது ஊருகூட பாக்கலாம் ஆனா என்னடா தனியா மாட்டிக்கிட்டோம்னு தான் இருக்கு... சரி அங்க போய் ப்ரெண்டு பிடிச்சுக்க வேண்டியதுதான்..

நல்லவேல, நல்ல கேங் அமைஞ்சிச்சு... ஒரே அரட்டை, கும்மாளமா இருக்கு, ஜாலியா போகுது...

என்னா ஆச்சு இவுங்களுக்கு, இப்டி கணக்கு பாக்குறாங்க.. சே !! அப்டி என்னத்த ஏமாத்திறப்போறோம்... ப்ரெண்ஸ்குள்ள கூடவா இப்டி 5 ரூபா எங்க போச்சுனு கணக்கு பாப்பாங்க...

எல்லாம் இந்த ஜோடி, ஜோடியா சேருராங்கல்ல அவுங்களால வந்தது.. எவ்ளோ ஜாலியா இருந்தோம் எல்லோரும். இப்போ என்னடானா, ஒவ்வொருத்தரும் தனிதனியா சுத்துறாங்க... சே !! என்ன ப்ரெண்ஸ் இவுங்க.. காலேஜ்ல யெல்லாம் எப்டி இருந்தோம்..

இனியும் எல்லாரும் சின்னப்பசங்க கெடயாது, நாம ப்ராக்டிகல் லைப்க்கு வந்தாச்சு...
ஒவ்வொருத்தரும் "தன்" எதிர்காலம்னு திட்டம் போடுற நெலமைக்கு வந்தாச்சு.. இனியும் எல்லாரையும் காலேஜ் ப்ரெண்ஸ் மாதிரி எதிர்பாக்குறது முட்டாள்தனம், நட்புக்கும், நிதர்சன வாழ்க்கைக்கும் இடைவெளி உண்டு, இல்லைனு சொல்றது நாம மட்டும் கண்ண மூடிக்குற மாதிரி.. இதுல யார் மீதும் தப்பு கெடயாது.. வாழ்க்கை போற வழி அப்படித்தான்...

ஹீம்.. ஒருவழியா ஆன்சைட் வந்தாச்சு, இனி தம்பி படிப்ப பாத்துக்கலாம்.. ஆனா ஏன் எல்லோரும் நார்த்தி, சவுத்தினு பிரிச்ச்து அடிச்சுகிறாங்க.. என்ன ப்ரெண்ஸ் இவுங்க...
அட ஒவ்வொருத்தருக்கா கல்யாணம் ஆரம்பிக்குதா, சூப்பர்ல.. இவ்ளோ சீக்கிரமா நாளெல்லாம் ஓடுது... , சே !! சுபா கல்யாணத்துக்கு கூட அங்க இருக்க முடியல..

இந்த மெட்ராஸ் பசங்க செம ஜாலி பண்றாங்க, மொத பாச்சிலர் லைப் சொதந்திரம் இருக்கும்போது எல்லோரும் சேந்து இருக்காங்க, நல்லா ஊர சுத்தி என் ஜாய் பண்றாங்க, நாம் இங்க வந்துட்டோம்.. ஒருவேள நாம போறதுக்குள்ள எல்லோருக்கும் கல்யாணம் ஆயிட்டா அப்பவும் இவ்ளோ ப்ரெண்ஸா இருப்பாங்களா.. இதப்பத்திதான் எனக்கும் கணேஷுக்கு நெறயநாள் இதப்பத்திதான் பேச்சு... பாப்போம் போகப்போக தெரியும்...

நட்புன்றது என்ன, அன்பை/சந்தோசத்தை பகிர்ந்துகிறது, அது கல்யாணத்துக்கப்புறம் பகிர்தலோட பெரிய பங்கு எங்க போகுது என்பது தான் பொஸ்சிவ்னஸ் பிரச்சனையாகுது.. முந்தி மாதிரி ப்ரெண்ஸ் கிட்ட ஒரு நாளோட முக்கால்வாசி நேரம் செலவழிக்க முடியாதுதான், ஆனால் கூட இருக்கும் அந்த சில நிமிடங்களாவது அந்த பழைய இன்டிமஸி இருந்தாலே போதுமே... அது அந்த அந்த நபர்களோட கையிலதானே இருக்கு...

ஏன்டா ஆன்சைட்ல இருந்து வர்ர மொதல்ல வீட்டுக்கு வரலியானு அம்மா கேட்டப்ப கூட... , என்னம்மா ரொம்ப நாள் கழிச்சு பசங்கள பாக்குறேன், ஒரு நாள்தானம்மா, இருந்துட்டு வர்றேனு சொல்லிட்டேன்.. அப்பா கூட ஒன்னும் சொல்லல..

என்னடா இது சில பசங்க கிட்ட என்னமோ வித்தியாசம் தெரியுது, முந்தி மாதிரி இல்ல.. எது கேட்டாலும் வேலைனு சொல்றானுங்க, எல்லாரையும் ஒரு எடத்துல கொண்டு சேக்குறது/பாக்குறதுனா பெரும்பாடா இருக்கு. மாம்பலத்துலயே ரெண்டு வீடு எடுத்து தங்கியிருகாங்கே ஆனா பாத்துகிட்டு 8 மாசம் ஆச்சாம், இன்னொருத்தன காலேஜுல பாத்ததாம்...

நட்புன்றதைவிட, பந்தங்களால் உருவாகும் அப்பா, அம்மா போன்ற சுயநலமில்லாத உறவுகள்தான் கடைசிவரை இருக்கும் போல..

காலேஜு முடிச்சு 3 வருசந்தான ஆகுது, அதுக்குள்ள 20 வருசம் முடிஞ்சு போன ரேஞ்சுக்கு பேசுறானுங்க, அப்போ 20 வருசம் கழிச்சு எப்படி இருப்பானுங்க... தெரியல.. ஒருவேல நாமலும் இன்னும் கொஞ்ச நாள்ல அப்படி ஆயிருவோமோ ?

முன்ன மாதிரி இல்ல, காரியரின் ஆரம்ப கட்டம்.. நெறய உழைக்கனும், அப்போ இப்படித்தான் ஆகும்போல.. ஆனாலும் 8 மாசமெல்லாம் ரொம்ப அதிகமில்லையா, அட எப்பயாவது ஒரு போன் கால் கூடவா கஷ்டமா இருக்கு...

ரொம்ப தயக்கத்துக்கப்புறம், நேத்து அப்பாகிட்ட அவர் ரிட்டயர்மன்ட்ல வரப்போற பணத்துல ஒரு நல்ல இடத்துல நிலம் வாங்கிப்போடுங்கப்பா பின்னாடி உதவியா இருக்கும்னு பேசிட்டுருந்தேன்.. அப்போ 6 மாசத்துக்கு முன்னாடி எங்கயோ கொஞ்சம் நிலம் வாங்கி பதிஞ்சாச்சுனு சொல்ல சொல்ல என்னவோ போலிருந்தது எனக்கு..

புது சட்டையெடுத்ததை கூட ஏதோ பெரிய விஷயம் போல பகிர்ந்துகிட்டிருந்த எனக்கு, இது ஒன்னோடது, அது அவனோடதுனு சின்ன வயசுல பழகிராத எனக்கு திடீரென ஒரு தீவைப்போல உணர்ந்ததை தவிர்க்க முடியல... , அட அப்போ தன் வாழ்க்கைனு வந்தப்புறம் பெத்தவுங்களுக்கும் பிள்ளைகளுக்கும் கூட ஒரு இடைவெளி இருக்குனு தோண ஆரம்பிச்சிருக்கு....

ரொம்பநாளாச்சு..இங்க என் உயிர்தோழர்களையும்/தோழிகளையும் பாக்க காத்துகிட்டிருக்கேன்.. ரொம்ப வருஷங்களாச்சு அவுங்கள நேர்ல பாத்து, ஒவ்வொருவருக்கும் குடும்பம், குழந்தைகள்னு ஆகிடுச்சு... நாமதான் இன்னும் ஊர் ஊரா சுத்திகிட்டு இருக்கோம்...

அட.. வந்துட்டாங்க.. பரவாயில்லை அரைமணிநேரம் கழிச்சு வந்தாலும்.. சிலராவது வந்துட்டாங்க.. என்ன அவனக்கானாம்?.. அட நெனக்குறோம் கால் பண்றான்!!!.. என்னாது குழந்தைக்கு ஒடம்பு சரியில்லயா.. பரவாயில்லடா .. நாம இன்னொரு நாள் தனியா பாத்துக்கலாம்.. என்னது சாரியா.. என்னடா புது வார்த்தையெல்லாம்..

எப்படி இருக்க.. எவ்ளோ நாளாச்சு.. என்னது இங்க அவரு சொந்தகாரங்க வீட்டுக்கு போனுமா.. ஹே நோப்ராப்ளம்.. நமக்குள்ள என்ன பார்மாலிட்டீஸ்.. அவுங்கதான் எதிர்பாப்பாங்க.. நீங்க போங்க நாம இன்னொருநாள் பாத்துக்கல்லாம்..

ஹேஹேஹே !!!! ஹாய்.. நாம மெயில் பண்ணியே ரொம்ப நாளாச்சுல.., ஹாங் நல்லா இருக்கேன், நீ எப்படி.. வேலைபோய்கிட்டு இருக்கு.. ஓ.. புறப்படுறியா.. சரி தென்.. பாப்போம்...

ஒவ்வொருத்தருக்கும் அவுங்க அவுங்க சூழ்நிலை, நம்ம கூட நேரம் செலவழிச்சாத்தான் நண்பர்களா என்ன... '

ஆனாலும், அந்த கெட்டுகெதர் ஹாலில் தனியே உட்கார்ந்திருந்த எனக்கு தனிமை ரொம்ப முன்னரே கைகுடுத்து மெல்ல மெல்ல பழகத்தொடங்கியிருந்தது போலொரு உணர்வு.. ஆனால் இன்றுதான் நான் அதை கவனிக்கத்தொடங்கியிருக்கேனோ ?!!!!

38 மறுமொழிகள்:

Athi சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 12:08:00 AM

மச்சான்... இதை பற்றி காலேஜ்லேயே திரு நகர் பார்க்கில் நானும் சுகுவும் பேசிக் கொண்டு இருந்தது தான் ஞாபகத்துக்கு வருகிறது. மேலும் தற்செயலாக 2 நாள் முன்பு தான், அப்பா-அம்மா உறவு தான் சாஸ்வதமானதா என்று யோசித்து கொண்டு இருந்தேன். சொல்ல போனால், டார்வின் சொன்ன மாதிரி, புதுப்பேட்டை படத்தில் சொன்ன மாதிரி எல்லோரும் Survival of the fittest'ஐ நோக்கி மெல்ல மெல்ல போக ஆரம்பிக்கிறோம். என்ன காலேஜ் முடிந்த பின் அதன் வேகம் அதிகரிக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இந்த 'survival' பணமுடன் நின்று விடுவதில்லை... நல்ல கணவனாக(மனைவியாக?) இருப்பதில் ஆரம்பித்து, நல்ல அப்பாவாக, நல்ல உயர் அதிகாரியாக... என்று போய்க் கொண்டே உள்ளது. எல்லோருக்கும் நல்லவனாக இருக்க வேண்டி நமது தனித்தன்மையை அழித்து கொண்டுள்ளோம். அவ்வாறு தனித்தன்மையுடன் இருந்தால், கர்வம் பிடித்தவன் என்ற வசவுகளைத் தான் வாங்க வேண்டி இருக்கும், ஜெயகாந்தன் மாதிரி!

Unknown சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 12:35:00 PM

செந்தில் அசத்தலானப் பதிவு. வாழ்க்கையின் மாற்றங்களை யதார்த்தமாப் படம் பிடிச்சுக் காட்டியிருக்கீங்க...லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டான உணர்வுகள் நிரம்பிய பதிவு. கடைசி சில வரிகளை நானும் அனுபவித்திருக்கிறேன்... வாழ்த்துக்கள்.

மணியன் சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 1:03:00 PM

செந்தில், அழகாக உணர்ச்சி கலவைகளை அவை கால பரிமாணத்தில் மாறுவதை காட்டியிருக்கிறீர்கள். போட்டிக்கு லேட்டானும் பதிவு அசத்தல்தான். போட்டிகளின் நோக்கமே ஒருவரை எழுத உந்துவதுதான். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது.

தாணு சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 1:48:00 PM

செந்தில்
உங்க பக்கங்களின் அடுத்த பக்கம் முடிவுறாமல் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு எல்லோரும் survival of the fittest theory படி settle ஆனப்புறம் பழசையெல்லாம் திரும்பிப் பார்க்கும் பருவம் ஒண்ணு வரும். அப்போ நீங்க நினைச்சுப் பார்க்கிற மாதிரியே எல்லோரும் நினைப்பாங்க. அப்போ தான் உண்மையான கெட்டுகெதெர் நடக்கும் . அதுவரை இது மாதிரி `மாய'த் தனிமை உணர்வு தவிர்க்க முடியாதது. உணர்வுகள் எல்லோருக்கும் ஒரே மாதிரிதான்

பொன்ஸ்~~Poorna சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 2:28:00 PM

யாத்திரிகன்,
நல்லா படம் பிடிச்சிருக்கீங்க.. இந்தத் தனிமை அப்பப்போ தோணும்ங்க.. சூழ்நிலை விளக்கம் எல்லாம் கூட ரொம்ப நல்லா இருக்கு.. ஒரு நாள் முந்தி எழுதி, போட்டில வந்திருக்கலாம்ல?

(பதிவுக்குச் சம்பந்த்மில்லாதது: ஆமா, உங்க டெம்ப்லேட் மாத்திட்டீங்களா? இப்போது முணுமுணுக்கும் பாடல்னு ஒண்ணு வச்சிருப்பீங்களே? அது கூட காணோமே?? :( )

பெயரில்லா சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 2:28:00 PM

Senthil..
ippathaan padichu muduchaen..
naan ippa free poolathaan irukaen..so busy yellam illa....
un effortukku oru paaraatu first...
romba nalla irunthuthu nee yaezhuthee irunthathu...i mean nee use pani iruntha tamil slang...
vazhkailla nee solli irukara maathiri naeraiyaa purinjukka vaendiyathu irukku....
changes accept panika marukarappathaan antha maathiri kastaam yellam...
really a good story...keep doing.....:-)

வவ்வால் சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 3:46:00 PM

அருமையான பதிவு யாத்திரிகன் எனக்கென்னமோ இது எல்லாம் உங்க சொந்த அனுபவம் போல தோனுது. இதுல சில பசங்க கூட விளையாடக்கூடாது பொறுக்கி பசங்க அவங்கனு சொல்லி நம்மை உதைக்கிறத எல்லா பெற்றோரும் தவறாம செய்வாங்க போல இருக்கே!

அபுல் கலாம் ஆசாத் சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 5:06:00 PM

இனிய செந்தில்,

எழுத எழுத நன்றாக வரும். இன்னும் சிறப்பாகப் படைக்கலாம்.

வாழ்த்துகள்.

அன்புடன்
ஆசாத்

கோவி.கண்ணன் சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 5:45:00 PM

யாத்ரீகன்,
உங்களின் இந்தப் பதிவு அருமை. ஏதோ நினைவுகளை கொண்டுவந்து பழசையெல்லாம் திரும்பி பார்க்க வைத்தது. பொதுவாகவே நேரமின்மை காரணங்களால் நீளமான பதிவுகளை நிதானமாக படிக்கமுடியவில்லை. இந்த பதிவை படித்துமுடித்ததும் தான் தெரிந்தது இது நீளமான பதிவு என்பதே. அழகாக தொகுத்து எழுதியிருக்கிறீர்கள். போட்டிக்கு அனுப்பியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நன்றாகவே வந்திருக்கிறது. கடந்த காலத்தில் நுழைந்து பயணம் செய்த மாதிரி இருக்கிறது, உங்கள் பெயருக்கு ஏற்றார் போல இந்த படைப்பும். பேச்சு வழக்கும் நன்றாகவே இருக்கிறது.

ப்ரியன் சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 6:26:00 PM

செந்தில் முதலில் எழுத்தைப் பற்றி அழகான கோர்வையாய் சொல்லவந்ததை சொல்லியிருக்கிறாய்.அதிலும் தடிமனான எழுத்துக்களைப் படிக்கையில் மனம் என்னவோ செய்கிறது நன்றாக வந்திருக்கிறது போட்டிக்கு அனுப்பி இருக்கலாம்.ஆட்டோகிராப் படம் பார்த்த அனுபவம்.அதிலும்,

/*
அந்த கெட்டுகெதர் ஹாலில் தனியே உட்கார்ந்திருந்த எனக்கு தனிமை ரொம்ப முன்னரே கைகுடுத்து மெல்ல மெல்ல பழகத்தொடங்கியிருந்தது போலொரு உணர்வு.. ஆனால் இன்றுதான் நான் அதை கவனிக்கத்தொடங்கியிருக்கேனோ ?!!!!
*/

சொல்ல வந்த விசயத்தை முழுமையா சொல்லிடுது.இது எல்லாம் நேர்மறை.என் கண்ணில் பட்ட எதிர்மறை விசயம் இதுதான் தமிங்கலம் :(

செந்தில்,நண்பர்களை நேசிக்கும் எல்லோருக்கும் இவை ஒரு சமயத்தில் நேர்பவைதாம்.அவரவர்களுக்கு அவரவர் வேலை முக்கியமாகிவிட தனித்துவிடப்பட்டதாய் உணார்கிறோம்.வேதனை தரக்கூடியதுதான் என்றாலும் அவர்களின் சூழ்நிலையையும் புரிந்துக்கொண்டால் வருத்தம் குறையும்.

ilavanji சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 6:44:00 PM

செந்தில்,

அருமையா வந்திருக்கு. போட்டிக்கு இல்லைன்னாலும் படிக்கறப்ப நம்ம வாழ்க்கைய திருப்பிப்பார்க்கற மாதிரியே இருக்கு!

தாணு சொல்வதுதான் சரின்னு படுது! அவரவர் ஓட்டத்தில் இழப்புகளைப்பற்றி சிந்திப்பதற்குக்கூட நேரமிருப்பதில்லை! :( ஒருவரை ஒருவர் குறைசொல்ல முடியாவிட்டாலும் ஓடிக்கிட்டேதான் இருக்குவேண்டியிருக்கு!

மிகவும் பிடித்தது:

"இனியும் எல்லாரும் சின்னப்பசங்க கெடயாது, நாம ப்ராக்டிகல் லைப்க்கு வந்தாச்சு...
ஒவ்வொருத்தரும் "தன்" எதிர்காலம்னு திட்டம் போடுற நெலமைக்கு வந்தாச்சு.. இனியும் எல்லாரையும் காலேஜ் ப்ரெண்ஸ் மாதிரி எதிர்பாக்குறது முட்டாள்தனம், நட்புக்கும், நிதர்சன வாழ்க்கைக்கும் இடைவெளி உண்டு, இல்லைனு சொல்றது நாம மட்டும் கண்ண மூடிக்குற மாதிரி.. இதுல யார் மீதும் தப்பு கெடயாது.. வாழ்க்கை போற வழி அப்படித்தான்"

PS: TCEன்னா Tamilnadu Engg College! அதுவா நீங்க?!

இரா. செல்வராசு (R.Selvaraj) சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 7:28:00 PM

செந்தில்,

கதையும் சொல்ல வந்த கருத்துக்களும் நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் ஓட்டம் அதிகம். இது போன்ற நனவிடைதோய்தல் பதிவுகளுக்கு இன்னும் கொஞ்சம் நிதானம் தேவை. (என் கருத்து). மேலே ஆசாத் சொன்னதோடு ஒத்துப்போகிறேன்.

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

VSK சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 8:05:00 PM

யதார்த்தத்தைப் படம் பிடிக்க முயன்று, மிகப் பெரிய வெற்றியைக் கண்டிருக்கிறீர்கள்!

ஒரு வாழ்க்கைத் தொடரையே, ஒரு சில கோடுகள் மூலம் காட்டும் மதன் கார்ட்டூன் போல, சின்னச்சின்ன வரிகளில் உணர்த்தியிருக்கிறீர்கள்.

தொடர்ந்து எழுதுங்கள்.

மேலும் மெருகேறும்.

எழுதியபின், ஒருமுறை மீண்டும் படித்து, சில தட்டுப்பிழைகளைக் களைந்தால், படிப்பவருக்கு நெருடல் இல்லமல், தடையின்றிச் செல்ல முடியும்.

தவறாக எண்ண வேண்டாம்.

இல்லையென்றால், இங்கு ஒருவர் கையில் குச்சியுடன் அலைந்து கொண்டிருக்கிறார்!

அவரிடம் அடி பட வேண்டிவரும்.!!

:))

வாழ்த்துகள்.

Kumari சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 8:55:00 PM

நேற்று உங்க பதிவை படிச்சிட்டு முதல் பின்னூட்டம் எழுதினேங்க. ஆனா எங்க வீட்டு Connectionனும், Bloggerரும் சதி பனிட்டாங்க போல :(
எனக்கு உங்க பதிவு ரொம்ப பிடிசிருந்தது, ஏன்னா, நானும் அந்த தனிமையை உணர்ந்திருக்கிறேன்.

//இனியும் எல்லாரும் சின்னப்பசங்க கெடயாது, நாம ப்ராக்டிகல் லைப்க்கு வந்தாச்சு...
.. இதுல யார் மீதும் தப்பு கெடயாது.. வாழ்க்கை போற வழி அப்படித்தான்//

என்னதான் இது உண்மைனாலும், அந்த ஏக்கம் அவ்வளவு சீக்கிரம் மறையாது.

Syam சொன்னது… @ வியாழன், ஜூன் 22, 2006 11:02:00 PM

நல்லா உனர்ந்து எழுதி இருக்கீங்க செந்தில்...இளவஞ்சி பிளாக்ல பார்த்தேன் நீங்களும் ஆம் சொல்லி இருப்பதை...நடத்துங்கள் யாகத்தை....வாழ்த்துக்கள்

Prakash G.R. சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 12:11:00 AM

படித்து முடித்ததும் சட்டென்று என் வாழ்க்கையை திரும்பி பார்த்த ஒரு அனுபவம். அடுத்த முறை வெற்றி பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மா.கலை அரசன் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 2:27:00 AM

நண்பரே, தங்கள் படைப்பு நன்றாக நீரோடை போல் அமைந்துள்ளது. கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கச் செய்துவிட்டீர்கள். எழுத்துப்பிழைகள் தவிர்த்தல் நலம்.

வவ்வால் சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 8:51:00 AM

வணக்கம் யாத்திர்கன்!

தங்களை ஆறு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பங்குகொள்ளுங்கள்.

http://vovalpaarvai.blogspot.com/2006/06/blog-post_115098459923649714.html

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 1:42:00 PM

dei enakku enna solradhunnu theriyala...
idha nee oru pottikku ezhudhiya kadhaiya ennala paaka mudiyala...

thaen vaenumna eppovum vandu dhan pookalai thaedi poganum...
pookal varalaindra karanathukaga, vandu thaedaradha nirathuradhum illai,
vaera pookalai paathu pogama irukkaradhum illa...

enkitta neraya thaen irukku, konjam eduthukka oru vandu varadhannu,
engugindra pookalum undu, adhai thaedi po...

ennamo thonichu ezhudhinaen, paathu sirikaadha...
enakku ippadi ellam ezhudha theriyaadhunnu unakkae theriyum...

konja naal kalichu nee ezhudhina padichu paatha unakkae sirippu dhan varum...
idha eludhum podhu dhan theriyudhu, ennoda tamil endha nilamaila irukkunnu...
adutha tripkku plan podu, koodiya seekiram sandhippom...

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 4:37:00 PM

அன்பின் யாத்ரீகன்...
பதிவு நன்றாக இருந்தது. தனிமையை உணரும் போது தோன்றுவதை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
நீளம் தான் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றியது. இன்னும் கொஞ்சம் எடிட் செய்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று பட்டது. மனதில் பட்டதைச் feedbackaaga சொன்னேன். தவறாக நினையாதீர்கள். நன்றி.

பெயரில்லா சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 5:12:00 PM

arumaiyana padhippu.. Parents kum namakkum irukira idaiveli namba avangala vitu konjam pirinju vandhapurame arambichiduthu .. starting from the college - hostel life

- KSB

வினையூக்கி சொன்னது… @ வெள்ளி, ஜூன் 23, 2006 6:00:00 PM

ஹே கலக்கிட்டப்போ.... நல்ல இருக்கு
இளவஞ்ஜி Sir,
TCE - Thiagarajar college of engineering, madurai

நெல்லை சிவா சொன்னது… @ சனி, ஜூன் 24, 2006 3:56:00 AM

சூப்பருங்க! கொஞ்சம் முந்தி வந்திருக்கலாம்! அடுத்த போட்டிக்கு முந்தி வாங்க, வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

kbm சொன்னது… @ சனி, ஜூன் 24, 2006 1:14:00 PM

Machaan,

Idhu oru nalla natpu-pasam patriya pathippu.. now ie after college life there's really a gap between most of the frnds and the same level of distance between parents and their childrens... simply we have to know the realization and live as per the Reality..!! - kbm

இப்னு ஹம்துன் சொன்னது… @ சனி, ஜூன் 24, 2006 3:28:00 PM

அன்பு யாத்ரீகன்,
தொடர்ந்து எழுதுக, வாழ்த்துக்கள்!

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 2:14:00 PM

@ஆதி:
சொல்லாம்லே இந்த வலைதளத்தை தேடி வந்தது ஆச்சரியமாய் இருந்தது :-) , ஹீ... நீ சொல்வது சரிதான்.. கல்லூரியில் இது இல்லாதது எந்த ஒரு பொறுப்பு (றெச்பொன்சிபிலிட்ய்) நம்மிடம் இருந்ததில்லை.. மற்றபடி.. உன் ஜெயகாந்தன் பற்றிய கருத்துக்களுக்கான விவாதமேடை இங்கில்லை ;-)

@தேவ்:
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி :-)

@மணியன்:
எழுதுபவனுக்கு, அவன் சொல்ல வந்ததை எந்த வித விளக்கமுமில்லாமல் படிப்பவர்கள் புரிந்துகொள்வதே பெரும் வெற்றி.. அந்த வகையில் உங்கள் புரிதல் எனக்கு வெற்றி மணியன்.... கூர்ந்து படித்தமைக்கு மிகவும் நன்றி.. :-)

@தாணு:
அந்த இறுதி சில பத்திகள் அந்த நிலைனு நினைத்திருந்தேன்.. அதையும் தாண்டினு சொல்றீங்க.. :-) இந்த வயசில எனக்கு அதை யோசித்துப்பார்பதற்கே கொஞ்சம் பயமாய் இருக்குது ... வருகைக்கு நன்றி தாணு..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 2:27:00 PM

@பொன்ஸ்:
என்ன பண்ன.... கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கனும்னு நினைச்சு நினைச்சு.. நேரம் ரொம்ப போயிருச்சு.. அடுத்த தடவை முயற்சி பண்ணனும்..

பதிவுக்கு சம்பந்தமில்லாதது: அட, அதெல்லாம் யாரும் கவனிக்குறதில்லைனு நினைச்சிருக்கேன்.. மேலும் அதை சரியான இடைவெளியில் மாத்துறதுக்கான சூழ்நிலையும் இல்லாம இருந்தது.. ரொம்ப நன்றீங்க அதை கவனிச்சு கேட்டதுக்கு.. இப்போ பாருங்க.. :-)

@பூவிதழ்:
மதுரை பேச்சுத்தமிழை கொண்டுவர கொஞ்சம் அதிகமாகவே சிரமப்பட்டேன் பூ, அதை ஒருத்தர் கவனிச்சு பாராட்டுறதுனா.. அப்போ அதை சரியாவே பண்ணியிருக்கேன்னு நினைக்குறேன்.. :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 2:37:00 PM

@வவ்வால்:
:-) எல்லாமே சொந்த அனுபவமில்ல.. ஆனால் அதோட தாக்கம் இதுல அதிகமா இருக்கு... எல்லோரும் இந்த மாற்றத்தை காதல், இனக்கவர்ச்சி,அப்பா அம்மா உறவுனு எழுதையில நண்பர்கள்-நட்புனு எல்லோரும் தாண்டுற உணர்வுகளை படம்பிடிக்கலாம்னு யோசிச்சதோட விளைவு.... நன்றி வவ்வால்.. சீக்கிரமே ஆறு பதிவை பதிஞ்சிரலாம்....

@ஆசாத்:
வருகைக்கும், ஊக்கத்திற்கும் நன்றி ஆசாத்.. :-) மீண்டும் மீண்டும் எழுதி தொல்லை பண்ணலாம்னு அனுமதி கொடுத்துட்டீங்க..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 3:36:00 PM

@ப்ரியன்:
சரிதான் ப்ரியன்.. அந்த புரிந்துகொள்ளுதல் கொஞ்சம் கொஞ்சமாய் எப்படி மாறுபட்டு/சிதைபட்டு வளருகின்றது என்பதை காமிக்க நினைத்து தான் இந்த கதை..

தமிங்கலம் :-) ஹீம்.. சரிதான்.. இதுவரை நான் எழுதிய பதிவுகளில் இப்படி இருந்ததே இல்லை, இது வேண்டுமென்றே புகுத்தப்பட்டது... இயல்பான கல்லூரி நண்பர்களின் பேச்சு வழக்கிலிருந்தால் கதை அந்நியப்படாது என்று யோசித்து ஆனால் முழு மனதில்லாமல் எடுத்த முடிவுதான்..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 3:42:00 PM

@இளவஞ்சி:
துரோணர் வாழ்த்து இந்த மாணவனுக்கு உற்சாகம் தல :-)

அதானே பார்த்தேன்... நீங்க கதையில விவரிச்சிருந்த இடமெல்லாம் வேற ஊர்ல இருக்கே, ஒருவேலை நீங்க பள்ளிக்கூடத்துல படிக்குறப்ப பார்த்த நியாபகமா இருக்கும்னு நினைச்சேன்... TCE சீனியர் வினையூக்கி கொடுத்த விளக்கம் தான்... பரவாயில்ல.. கல்லூரியில இல்லாட்டியும் இங்க நீங்க சினியர்தான்

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 3:52:00 PM

@sk:
தவறாக எண்ணவில்லை, இத்தகைய விமர்சனங்கள் என்னை மேலும் மெருகேற்றிக்கொள்ள உதவும்.. மிகவும் நன்றி..

தட்டுப்பிழைகள் அல்ல அவை, மதுரை பேச்சுத்தமிழைகொண்டுவர நினைத்து வேண்டுமென்றே, வார்த்தைகளை சிதைத்து பதிந்தேன் :-( , சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.. குச்சியில் அடிவாங்க நான் தயாரில்லை, பள்ளிக்காலத்தில் கூட எழுத்துப்பிழை விட்டதில்லை ... சரி அந்த குச்சி உங்க கையில இல்லையில... :-)

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 4:07:00 PM

@குமாரி:
ரொம்ப ரொம்ப நன்றீங்க... உங்க பதிவுல உங்க கதையை பத்தி கருத்து சொல்ல முடியல என்னால, ஆனாலும் வந்ததுக்கு நன்றி :-) ... சரியாச் சொன்னீங்க.. எல்லோரும் அதை கடந்து தான் வர்ரோம், ஒரு கட்டத்துல குற்றம் சாட்டுற இடத்துல இருந்தாலும், கொஞ்ச நாளில குற்றம் சாட்டப்படுற இடத்துல நிக்கப்போறோம்ன்றது தெரியாம :-)

@ஷ்யாம்:
நன்றி ஷ்யாம்..

நான் குறிப்பிட்டிருந்த TCE - Thiagarajar College of Engg, Madurai

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 4:14:00 PM

@பரணி:
>>> என் வாழ்க்கையை திரும்பி பார்த்த ஒரு அனுபவம்

:-) கேட்கவே மகிழ்சியா இருக்கு..

>>> அடுத்த முறை வெற்றி பெற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ரொம்ப நன்றீங்க.. :-)

@கலை:
நன்றி கலை.. இங்கே இருப்பவை முன் சொன்னதைபோல வட்டார பேச்சுத்தமிழை கொண்டுவர முயன்றது.. இனி இவ்வளவு மோசமாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் :-) இனிய பெயர் உங்களது

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 4:19:00 PM

@டுபுக்ஸ்:
வாங்க சார்.. ஆமாம் நீளம் ரொம்ப அதிகம்தான் :-( , முழுவதும் அடித்து முடித்தபின் தான் கவனித்தேன், எதை தூக்கினாலும் சொல்ல வந்தது குறைவதாயே தோன்றியது ... ஒருவேளை முதல் கதை எழுதும்போது இப்படிதான் இருக்குமோ ? :-) இதுல தவறா நினைச்சுக்க என்ன இருக்கு.. நீங்க சொல்லாம போனாத்தான் தவறு :-)

@Kஸ்B:
சரிதான் நண்பா.. அந்த எக்கச்சக்க சுதந்திரம் மட்டுமில்லாம, நண்பர்களோடயே வாழ்கைனு இருக்கும்போது நம்மளை அறியாமலே ஆரம்பிச்சுடுது..

@வினையூக்கி:
நன்றி சீனியர் :-)

@சிவா:
என்ன பண்றது சிவா, எந்த கதையையும் படிக்காம ஆரம்பிச்சிருந்தா சீக்கிரம் வந்திருக்கலாம், படிச்ச கதைகளோட தாக்கம் இல்லாம இருக்கனும்னு ரொம்ப மெனக்கெடவேண்டியதாயிடிச்சு..

யாத்ரீகன் சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 4:24:00 PM

@முருகேசு:
டாங்க்ஸ் மச்சான் :-)

@இப்னு:
நன்றி இப்னு :-)

Syam சொன்னது… @ திங்கள், ஜூன் 26, 2006 8:34:00 PM

ஐயய்யோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்...நான் சொன்னது TCE - Tamilnadu College of Engg :-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது… @ புதன், டிசம்பர் 05, 2007 8:49:00 AM

நல்லா எழுதி இருக்கீங்க

யாத்ரீகன் சொன்னது… @ புதன், டிசம்பர் 05, 2007 8:59:00 AM

நன்றி இரவி,
பொறுமையாய் பழைய இடுகைகளை புரட்டிப்பார்த்ததற்கு :-)

கருத்துரையிடுக